சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, ஜனநாயகம் என்பது இந்தியாவின் இயல்பு மற்றும் அதன் இயல்பான போக்கு ஆகும்.
நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் தனிச்சிறப்புடன் கூடிய இலக்குகளை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் மட்டுமே இது நிறைவேறும். ஜனநாயகத்தில் அனைவரின் முயற்சிகளைப் பற்றி நாம் பேசும்போது, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில், அனைத்து மாநிலங்களின் பங்கும் அதன் முக்கிய அடித்தளமாகும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வடகிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கட்டும் அல்லது பல தசாப்தங்களாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதாக இருக்கட்டும் ... கடந்த சில ஆண்டுகளில் அனைவரின் முயற்சியால் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு மிகப்பெரிய உதாரணம் கொரோனா.
அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு எதிரான போரை ஒற்றுமையாக நடத்தியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இன்று இந்தியா 110 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி மைல்கல்லை கடந்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று நினைத்த ஒன்று, இப்போது சாத்தியமாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலங்களின் சட்டப்பேரவை தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண் 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர் கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந மத்திய நிதி மந்திரி
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க தமிழ் சினிமா
சிறப்பானவை
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45