தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பர பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
