ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம் எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தளதா மாளிகை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாகவும், தனது வலையொளி அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை காவல்துறை விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள காவல்துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, சுற்றுலா காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலு
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்