பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்காமல் இருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. அதேசமயம், பல்வேறு மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். கலால் வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், அரசின் இந்த முடிவு, சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர
மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச் மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்