மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந்தேதி டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர். இதனிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 13-ந்தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த சூழலில் நேற்று மாலை 5.15 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் விஜயமாக விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது தமிழக நிலவரங்கள் குறித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பிரதமரிடம் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2 அல்லது 3 நாள் டெல்லியில் தங்கி இருந்து விட்டு சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும
முதல்- அமைச்சர்
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வ திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க