More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை!
விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை!
Oct 23
விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை!

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால் செயற்கைக் கால் பொருத்தி தனது கலைப் பயணத்தை தொடர்கிறார். தமிழ், இந்தி சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.



இந்நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதும், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை கழற்றி காட்டுவதும் வேதனையாக உள்ளது என கூறி உள்ளார்.



நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், நான் ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன். எனது நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.



ஆனால், தொழில்முறைப் பயணமாக நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னைப் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர்.



மோடி அவர்களே, இது மனிதச் செயல்தானா? இதுதான் நமது தேசம் பேசுகிறதா? இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் தரும் மரியாதை இதுதானா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்." என சுதா சந்திரன் கூறியிருந்தார்.



சுதா சந்திரனின் வீடியோ பதிவு வைரலான நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை டுவிட்டரில்  பதிவிட்டுள்ளது.



உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே செயற்கை உறுப்பு பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். இதுபோன்று எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருப்பதை உறுதி செய்வோம்" என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா

Oct09

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதனà

May03

அட்லீ இயக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் 

தமிà

Feb25

கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களிà®

Aug13

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்

Jun09

நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என திà

Dec29

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.

Feb14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்கு

Apr07

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக à®

Sep27

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்à®

Mar05

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட

Mar27

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வà®

Jul16

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ

Aug10

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா

Feb11

இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நேà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (05:55 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (05:55 am )
Testing centres