தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டனர். இதில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா