சிபிராஜின் ‘மாயோன்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள்!
Oct07
சிபிராஜின் ‘மாயோன்’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள்!
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘மாயோன்’. கிஷோர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிபிக்கு ஜோடியாக தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். இளையராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 5 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மத்தை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிபிராஜ், இயக்குனர், கிஷோர், நடிகை தன்யா, ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.