இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுக்குள் வரவில்லை. பொருளாதாரப் பிரச்சினைகளால் நாட்டைத் தொடர்ந்து மூடிவைக்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே ஊரடங்குத் சட்டத்தை நீக்கினோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும்.
ஒரு மாதத்துக்கும் அதிக காலம் நாட்டை மூடி கொரோனாத் தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.
மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும்.
நாட்டைத் தொடர்ந்து மூடி வைக்க முடியாது. கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவுக்கமைய தொற்றை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது.
இந்தக் காலப்பகுதிகளிலும் அதேபோன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்கொண்டு நடத்திச் செல்ல முடியும்.
அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் வழமையான முறையில் நடத்திச் செல்லப்படவுள்ளது. அதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.
இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
