பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கேப்டன் அமரிந்தர் சிங் முதலமைச்சராகவும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சித்து காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவராகவும் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், திடீரென சித்துவும் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. அதேவேளையில் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
நேற்றிரவு நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் சரண்ஜித் சிங்கை சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையிலான சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் சித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட இருப்பதாகவும், பஞ்சாப் அரசு முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது இந்த குழுவிடம் ஆலோசனை நடத்தும் என்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது. அந்த குழுவில் முதல்வர், சித்து மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள் திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
