ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்ரீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் அங்கு மருத்துவ பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 14-ந்தேதி வழக்கம் போல கடைக்கு சென்ற இவரை, கடைக்கு அருகே வைத்து மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். துப்பாக்கி முனையில் அரங்கேற்றப்பட்ட இந்த கடத்தல் சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லியில் வசித்து வரும் பன்ஸ்ரீலால் அரிண்டாவின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், அவரை மீட்பதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சியமைத்து உள்ளதால், பன்ஸ்ரீலாலின் கதி என்ன? என்பது தெரியாமல் அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா நேற்று காலையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய உலகம் மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்து உள்ளார்.
இது பன்ஸ்ரீலாலின் குடும்பத்துக்கு பெருத்த நிம்மதியை கொடுத்து உள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹா
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப
அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்
நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
