மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்த 25 வயது பெண், ஆண் நண்பர் ஒருவருடன் பழகி வந்தார்.
இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தார். அதற்கு அவர் கருவை கலைத்துவிடும்படி கூறினார். ஆஸ்பத்திரிக்கு சென்று கருக்கலைப்பு செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் ரகசியமாக கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்தனர்.
இதுசம்பந்தமாக யூடியூப்பில் சில வீடியோக்கள் இருப்பதை பார்த்து ஆண் நண்பர் அதுபற்றி அந்த பெண்ணிடம் கூறினார். யூடியூப் வீடியோவை பார்த்து அதன்படி கருக்கலைப்பு செய்து கொள்ளும்படி கூறினார்.
அவர் சொன்னது போல யூடியூப் வீடியோவை பார்த்தபடியே கருக்கலைப்பு முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதில் அவருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய நிலைக்கு சென்றார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய ஆண் நண்பர் யார் என்றும் விசாரித்தனர். சோயுப்கான் (வயது 31) என்பவர் தான் தனது நண்பர் என்று அந்த பெண் கூறினார்.
இதையடுத்து அவர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம் பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
