சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா எழும்பூரில் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அருங்காட்சியகத்தில் காவல் துறையின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் பழங்கால பொருட்கள் இடம்பெற்று உள்ளன.
மேலும் போலீசார் பயன்படுத்திய பழமையான உடைகள் முதல் ஆயுதங்கள் வரை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. அவைகளை மு.க.ஸ்டாலின் பார்த்து வியந்தார்.
முன்னதாக விழாவுக்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந
திமுக அரசு அனைத்து துறைகளிலும்
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கட
பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க
பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி
சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
