தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா - 2021 (என்சிடி மசோதா) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் எந்தவொரு நடவடிக்கையையும் நிறைவேற்றும் முன்னர் துணைநிலை ஆளுநரின் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் என்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.
இந்நிலையில், என்சிடி மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.
இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் இனி அறிவிக்கை வெளியிடும். டெல்லியில் துணைநிலை ஆளுநருடன் அதிகார மோதலில் ஈடுபட்டு வந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நிர்வாகத்துக்கு புதிய சட்டம் கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்
15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய
