இந்தியா

 • All News
 • ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்- 15 புதிய மந்திரிகள் பதவியேற்பு!
ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்- 15 புதிய மந்திரிகள் பதவியேற்பு!
Nov 21
ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்- 15 புதிய மந்திரிகள் பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார். இந்த மோதலால் கெலாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது.காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியது. தனது ஆதரவாளர்களுக்கு மந்திரிசபையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அது நிறைவேற்றப்படாததால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்தார்.இதற்கிடையே ராஜஸ்தான் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார். இந்த பணிகளுக்காக காங்கிரஸ் பொதச்செயலாளர் அஞ்சய் மக்கான் ஜெய்ப்பூர் சென்றார்.ராஜஸ்தான் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவை பதவி ஏற்பதற்காக அனைத்து மந்திரிகளும் பதவி விலகினர்.இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்றப்பிறகு கெலாட் மந்திரிசபை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 11 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 4 பேர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 12 பேர் புதுமுகங்கள் ஆவார்கள். அனைவருக்கும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug11

கோவையில் 

May15

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா

Oct10

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ

Jul01

டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச

Jan17

மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக

Jun12

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச

Jun20

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப

Feb07

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Jul04
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (06:02 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (06:02 am )
Testing centres