இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் பழைய குயவர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜன்(46). இவரும் இவரது மனைவியும் ஒன்று சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை குறித்த அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ள இவர் ஆலோசகராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தம்பதி பங்கு சந்தையில் நல்ல லாபம் ஈட்டி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் வெடிக்கும் போர் காரணத்தினால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜன் தனது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் சகோதரி பல முறை கால் செய்தும் எடுக்காததால் சந்தேகத்தின் பெயரில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவை திறக்க முடியாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது இருவரும் பிணமாக தொங்கியதையடுத்து அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பமத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா
