தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த குஜராத்தைச் சேர்ந்த ஷாமா பிந்து எனும் 24 வயது இளம் பெண் திருமணம் நேற்று நடைபெற்றது.
சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஷாமா பிந்து அறிவித்தார். ஷாமா பிந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஜூன் 11 ம் திகதி அவர் திருமணம் செய்துகொள்வதாக முதலில் முடிவு செய்திருந்தார். எனினும், அக்கம்பக்கத்து வீட்டாரின் எதிர்ப்பால் திருமணத்தை முன்கூட்டியே நடத்த முடிவு செய்துவிட்டார்.
மேலும் வேறு வகையில் பிரச்சினைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவர் திருமணத்தை முன்கூட்டியே நடத்தி முடித்திருக்கிறார். குஜராத்தின் வதோதராவில் உள்ள கோத்ரி பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அவரது திருமணம் நேற்று நடைபெற்றது.
மொத்தம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்ச்சியில் அவரது தோழிகளும், அலுவலக சகாக்களும் கலந்து கொண்டனர்.
சடங்கில் தனக்குத்தானே நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்ட ஷாமா பிந்து, திருமணம் நடந்ததற்கான அடையாளமாக திருமாங்கல்யத்தையும் அவரே கழுத்தில் கட்டிக் கொண்டார். மணமகன் இல்லாமல் இந்தத் திருமணம் இனிதே நிறைவு பெற்றது.
இந்தியாவில் இதுபோன்ற ஒரு திருமணம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து ஷாமா பிந்து கூறுகையில்,
“இந்தத் திருமணத்தை கோயிலில் நடத்தலாம் என்று விரும்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக திருமணம் நடைபெற்ற இடத்தை மாற்றிவிட்டேன். எனது வாழ்க்கையில் என்னை நானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள 7 வாக்குறுதிகளை திருமணத்தின்போது படித்தேன்” என ஷாமா பிந்து கூறியுள்ளார் .
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
அதிமுக ஒ
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான