அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தங்களுடைய எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவ்விரு இடங்களும் காலியானது. அந்த இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அவர்களுக்கான வெற்றி சான்றிதழையும் நேற்று வழங்கினார்.
இந்த நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி சோமுவும் ராஜேஷ்குமாரும் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முதல்-மந்திரி
முதல்- அமைச்சர்
இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
