இந்தியா

 • All News
 • இலங்கையிலிருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு: தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்
இலங்கையிலிருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு: தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்
Jun 10
இலங்கையிலிருந்து தமிழகம் வந்த நபரால் பரபரப்பு: தீவிர விசாரணை நடத்திய பொலிஸார்

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறி வந்ததோடு அவர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா? அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் மரைன் பொலிஸார், கியூ பிரான்ச் பொலிஸார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த தீடை பகுதியில் கடல் பகுதியில் கடல் நீரில் நனைந்த படியே தஞ்சம் அடைந்து இருந்தால் அகதியாக வந்து இருக்கிறார் என்று பொலிஸார் அழைத்து சென்று மண்டபம் அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தோடு தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையடுத்து மரைன், கியூ பிரான்ச் பொலிஸாரின், மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் அவர் விசா மூலம் இலங்கை கொழும்பில் இருந்து சென்னை வந்து பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று (09-06-2022) காலை ராமேஸ்வரம் வந்துள்ளார்.தற்போது அவரை முழு விசாரணை நடத்தியதில் விசா மூலம் வந்தது உறுதியானதை அடுத்து அவருடைய விசாவின் கால அவகாசம் இன்னும் 90 நாட்கள் உள்ளது.இந்த நிலையில் மத்திய புலனாய்வுத் துறையினர் இலங்கையில் இருந்து விசா மூலம் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை திருகோணம் பகுதியில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.இந்த நிலையில் விசா மூலம் தமிழகம் வந்த இலங்கையை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் முறையான ஆவணங்கள் வைத்துள்ளதை அடுத்து சந்தேகப்படும் படியாக வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் வி

Feb06

 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க

Jun16

கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்

Feb26

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில

Jan25

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய

Aug18

அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்

Jun18

மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்

Aug05

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள

Sep16
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 30 (09:43 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 30 (09:43 am )
Testing centres