தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்துவிட்டு திடீரென்று நீக்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம்.
ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
