மாமியாரை கொலை செய்த மருமகன்- மட்டக்களப்பில் சம்பவம்...!!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்படட வாகனேரி பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிகின்றனர் .
வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளநிலையில் அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.
மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது .
பின்னர் மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy