ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா
Mar07
ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 04 ஆம் திகதி சனிக்கிழமை அன்று காலை 7 .30 மணிக்கு விநாயகர் வழிபாடுகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் திருவிழா இனிதே ஆரம்பமாகியது.
திருவிழாவில் 06 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்று வசந்த மண்டல பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றதோடு மும்மூர்த்திகளின் உருவ சிலைகள் ஆலயத்தில் உள்வீதி வலம் வந்து தொடர்ந்து முத்தேர் பவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.