ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். ஒரு மாதகால நோன்பு காலம் நிறைவடைந்த நிலையில் இன்று ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ஜீம்மா மசூதிக்கு சுமார் 1 லட்சம் பேர் புத்தாடைகள் அணிந்து வந்திருந்தனர். அங்கு ரமலான் சிறப்பு தொழுகையில் அவர்கள் ஈடுப்பட்ட பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். டெல்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகையில் ஈடுப்பட்டனர். இதில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்று தொழுகையில் ஈடுப்பட்டனர்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களூர் சர்வதேச மைதானத்தில் ரமலான் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி தொழுகையில் ஈடுப்பட்டனர். இதில் நடிகர்கள் மாமூட்டி, அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள மசூதியின் வளாகத்தில் ரமலான் தொழுகையையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து வந்து ஒன்றுகூடி தொழுகையில் ஈடுப்பட்டனர். பின்னர், சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அவர்கள் வாழ்த்தை பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் ரெட் ரோடு பகுதியில் ரமலான் தொழுகைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உலக அமைதியை வேண்டி ஏராளமானோர் அங்கு கூடி வழிப்பட்டனர். அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இதில் பங்கேற்றனர். இதில் பேசிய மம்தா பானர்ஜி நாட்டில் அமைதியை நாம் அனைவரும் விரும்புவதாக கூறினார். நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ர
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக