முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள் ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.
முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்துஇ அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.
முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும். முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும். மேலும் ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. அவர்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன. எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்க
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவ