பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
211க்கு 148 என்ற கணக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றுள்ளார். ஜோன்சன் 63 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போரிஸ் ஜோன்சன் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் தொடர்வார். மேலும் தற்போதைய விதிகளின்படி, ஒரு வருடத்திற்கு இதுபோன்ற மற்றொரு சவாலில் இருந்தும் விடுபடுவார்.
இருப்பினும், சிலர் விதிகளை மாற்ற முயற்சி செய்யலாம், மற்றொரு வாக்கெடுப்பை விரைவில் நடத்தலாம் என்று ஊகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்ட இந்த செயல்முறையை மேற்பார்வையிடும் சர் கிரஹாம் பிராடி “தொழில்நுட்ப ரீதியாக, இது சாத்தியம்" என்றார்.
இன்றைய வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சன் வெற்றிபெற்றிருந்தாலும், அவர் மேலும் சவால்களை எதிர்கொள்கின்றார். ஜூன் 23 அன்று, வேக்ஃபீல்ட் மற்றும் டிவர்டன் மற்றும் ஹானிடன் ஆகிய இடங்களில் புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு இடங்களும் முன்பு கன்சர்வேடிவ்களால் கைப்பற்றப்பட்டன, எனினும் அந்த இடங்களை எதிர்க்கட்சிகள் கைப்பற்றினால் ஜோன்சன் மீண்டும் அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகளை மீறியமை, பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் போரிஸ் ஜோன்சனின் தலைமைத்துவ பாணியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை முன்வைத்து குறித்த நம்பிக்கை பிரேரணை சொந்த கட்சியினரால் கொண்டுவரப்பட்டது.
மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் போரிஸ் ஜோன்சன் 63 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் "அழகாக" வெற்றி பெற்றதாக கல்விச் செயலாளர் நாதிம் ஜஹாவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உல
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ந
லண்டனில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்
பிரித்தானியாவில் ரஷ்ய விமானம் ஒன்று சிறைப்பிடிக்கப்
லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொ
லண்டனில், இளம்பெண் ஒருவர், கோடீஸ்வரர் ஒருவருடைய மகனால
கிழக்கு லண்டனில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிட தொகுத
லண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய சிறுவன் இனர
கிழக்கு லண்டன் நெடுஞ்சாலையில் மின்சார ஸ்கூட்டர் ஒன்ற
உக்ரைன் மீதாக ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிக
பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்
இலங்கைக்கு வரும் தனது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பயண