பிரபல தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கும் நடிகைகள் விடுதியில் கைது
Mar12
பிரபல தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கும் நடிகைகள் விடுதியில் கைது
சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் துணை பாத்திரங்களில் நடிக்கும் சில நடிகைகளை பயன்படுத்தி, மினுவங்கொடை பிரதேசத்தில் நடத்தி வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த நடிகைகளை கைது செய்துள்ளனர்.
தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான இரண்டு தொலைக்காட்சி நாடகங்களில் துணை பாத்திரங்களில் நடிக்கும் யுவதிகளை கொண்டு, இந்த பாலியல் தொழில் விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு பிரபல தொலைக்காட்சி தொடர்களில் துணை பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர், இந்த நடிகைகளை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து வருவதாகவும் யுவதிகள் தலா 8 ஆயிரம் ரூபாவுக்கு பலருக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் குறித்து மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.