நாம் வீட்டில் சில பொருட்களை வாஸ்து தெரியாமல் வைத்திருப்போம். இவ்வாறு நாம் தெரியாமல் வைத்திருக்கும் பொருட்களால் நாம் பெரும் விபரீதத்தினையும், பணக்கஷ்டத்தினையும் ஏற்படுத்தும் என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை.
அவ்வாறு வீட்டில் இருக்கவே கூடாத நான்கு பொருட்களை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஓடாத கடிகாரம்
வீட்டில் நன்கு ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் திடீரென ஓடாமல் இருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். அல்லது அவற்றினை சரிசெய்து மாட்ட முடியவில்லை என்றால் புதிய கடிகாரத்தினை வாங்கி மாட்டவும்.
வீட்டில் ஓடாத கடிகாரம் இருந்தால் எதிர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யுமாம். இதனால் அதிக கடன்சுமை, குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும்.
கண்ணாடி
நாம் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டாலோ, அல்லது சிறு கீரல் ஏற்பட்டாலோ அதனை உடனே வெளியே தூக்கி எரிந்துவிட ணே்டும்.
முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமின்றி சமையலறை மற்றும் பூஜை அறையில் கண்ணாடி பொருட்கள் உடைந்தாலும் உடனே அப்புறப்படுத்த வேண்டும். இது பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்களுக்கும் பொருந்தும்.
இரும்பு பொருட்கள்
வீட்டில் துரு பிடித்த இரும்பு பொருட்கள் இருந்தால் அதனை தூக்கி எரிந்து விட வேண்டும். அவ்வாறு துரு பிடித்த பொருட்களை எமரி பேப்பர் மூலம் தேய்த்து எடுத்து துரு இல்லாமல் வைத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு இல்லையெனில் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு இரும்பு பொருளுடன் கரித்துண்டு, சாக்பீஸ் இவற்றினை போட்டு வைக்கலாம்.
காய்ந்த செடிகள்
வீட்டைச் சுற்றிலும் செடி வளர்ப்பவர்கள் இதனை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆம் ஆசையாக வாங்கி வைத்த செடி துளிர் விடாமல் காய்ந்து போய்விட்டால், உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
பட்டுப்போன, காய்ந்த செடிகள் வீட்டை சுற்றி இருந்தால் எதிர்மறை ஆற்றல் அதிகரிப்பதுடன், வீட்டில் பல பிரச்சினைகளும் ஏற்படும்.
மங்களகரமான பிலவ வருடம் தை 14ஆம் நாள் வியாழக்கிழமை (ஜனவர
குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, ஒர
நாம் வீட்டில் சில பொருட்களை வாஸ்து தெரியாமல் வைத்திரு
ஏப்ரல் 3 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திரன் நாள் முழுவதும
மங்களகரமான பிலவ வருடம் தை 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜ
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறி