காரில் மின்னல் வேகத்தில் சென்று வம்பை விலை கொடுத்து வாங்கிய பிரபல கோடீஸ்வரர்! நடந்தது என்ன?
Feb02
காரில் மின்னல் வேகத்தில் சென்று வம்பை விலை கொடுத்து வாங்கிய பிரபல கோடீஸ்வரர்! நடந்தது என்ன?
ஜேர்மனியில் காரில் சுமார் 417 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த நபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே அதிவேக செல்லும் வாகனங்களில் ஒன்றாக விளங்குவது Bugatti Chiron. இந்த காரின் விலை 22 கோடியே 39 இலட்சம் ஆகும். இது சுமார் 1500 குதிரைகளின் அளவுக்கு விரைவாக செல்ல கூடிய திறனை கொண்டுள்ளது.
எனவே இது ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்நிலையில் ஜேர்மனியில் வசிக்கும் பிரபல கோடிஸ்வரரான Radim Passer(58) Bugatti Chiron காரை பல கோடியை கொடுத்து வாங்கியுள்ளார்.
Berlin–Hanover இடையில் இருக்கும் 6 வழிச்சாலையில் தனது Bugatti Chiron காரில் சுமார் 417 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார். அந்த நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு இல்லை என்பதால் அவர் பயணித்த வேகம் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே வாகன பந்தய வீரர் ஜெபஸ்டின் உட்பட பல மக்களும் அந்த நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் Radim Passer தனது விலை உயர்ந்த கார் மூலம் வேகமாக சென்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகின்றது.