coronavirus

  • All News
  • பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு ஏற்பட்ட நெருக்கடி - கனவாக மாறிய ஆசைகள்
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு ஏற்பட்ட நெருக்கடி - கனவாக மாறிய ஆசைகள்
Feb 24
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு ஏற்பட்ட நெருக்கடி - கனவாக மாறிய ஆசைகள்

பாரிஸ் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட தம்பதி ஒன்று கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.



கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி குறித்த தம்பதி உட்பட 6 பேர் பாரிஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களின் பயணத்தை முடித்துக் கொள்ளும் திகதியாக கடந்த 27ஆம் திகதியை தெரிவு செய்திருந்தரனர்.



அதற்கேற்ப அனைத்த நடவடிக்கைகளையும் நிறைவு செய்துவிட்டு பிரான்ஸ் திரும்புவதற்காக PCR பரிசோதனை செய்த போது குறித்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



உடனடியாக அவர்கள் கொழும்பு, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். சிகிச்சை முடிந்து மீண்டும் நாடு திரும்புவதற்காக PCR பரிசோதனை செய்துக் கொண்டனர். அதன் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்.



அதேபோன்று மூன்றாவது முறையும் கொரோான தொற்று உறுதி செய்யப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அவர்களுடன் இலங்கை வந்த குழுவினர் திட்டமிட்ட திகதியில் பாரிஸ் வந்தடைந்துள்ளனர். எனினும் இந்த தம்பதியினால் 16 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கை மருத்துவமனை மருத்துவர்கள் பிரெஞ்சு தம்பதிக்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.



இறுதியில் நீண்ட போராட்டத்தின் பின்னர் நான்காவது முறையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.



அதற்கமைய சிகிச்சைக்கு பின்னர் கடந்த வாரம் இந்த தம்பதி பாரிஸ் சென்றடைந்தனர், தங்கள் கனவு பயணம் நெருக்கடியான பயணமாக மாறிவிட்டதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படியான நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என அந்த தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (15:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (15:40 pm )
Testing centres