வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு ஒன்று மரணமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையின் தவறே குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றின் 9 மாதக் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது குழந்தையை கோவிட் விடுதிக்கு கொண்டு சேர்த்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் 5 ஆம் விடுதியில் அனுமதித்து சிகிச்சையளித்துள்ளனர்.
இன்று (22.02) காலை வரை பெற்றோருடன் கதைத்த குழந்தையின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதுடன், குழந்தை மரணமடைந்துள்ளது.
குறித்த குழந்தையின் மரணத்திற்கு வைத்தியசாலையின் தவறே காரணம் என தெரிவித்து பெற்றோர் வைத்தியசாலை விடுதியில் முரண்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களை வெளியேற்றியிருந்தனர்.இதேவேளை, வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்துரையாடியதுடன், குறித்த குழைந்தையின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
வவுனியா கூமாங்குளத்தில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்ட
வவுனியா - குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மதுபோ
வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இடம்பெற்ற வி
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாத
வவுனியாவில் புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்ட
வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டம
வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக க
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு ஒன
வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74வது சுதந்திர த
கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒரு