சற்று முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து- ஸ்தலத்தில் பெண் பலி!
Feb22
சற்று முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து- ஸ்தலத்தில் பெண் பலி!
கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பிலும் உயிரிழந்த பெண் தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.