பேருவளை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மின்சாரத்தூண்டில்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒன்பது மீனவர்களை கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து ஆறு மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட மின்சார தூண்டில்களை பயன்படுத்துவதனால் அரியவகை மீனினங்கள் மற்றும் அழியும் தருவாயிலுள்ள மீனினங்கள் என்பன பெருமளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, தலவாக்கலையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நபர்களுக்கு இடையில் 10,000 ரூபா கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே இதற்கு காரணம் என விசாரணை மூலம் தெரியவந்து. இந்த நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று மாலை வனப்பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த நபரை இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விழுந்து கிடந்த பணம
மலையகத்தில் குளிர் காரணமாக ஒருவர் மரணமான சம்பவம் பதிவ
விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காண
தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வ
பேருவளை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மின்சாரத்தூண்டி