கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமான சாலையோர உணவை வைத்து செய்யப்பட்ட சாதனைக்காக அந்த உணவு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
முட்டைகளைக் கொண்டு செய்யப்படும் அந்த உணவின் பெயர் ரோலெக்ஸ். இந்தச் சாதனையை உகாண்டாவைச் சேர்ந்த யூ-டியூபர் ரேமண்ட் கஹுமா மற்றும் 60 பேர் இணைந்து செய்துள்ளனர்.
ஃபிரை செய்யப்பட்ட ஆம்லெட்டுன் மிருதுவான ரொட்டியில் காய்கறிகளை உள்ளே வைத்து பரிமாறப்படுவதுதான் ரோலெக்ஸ். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த உணவை கின்னஸ் சாதனைக்காக 2.32 மீட்டர் நீளமும் 0.66 மீட்டர் அடர்த்தியான விட்டமும் கொண்டதாக உருவாக்கியுள்ளனர். இதன் எடை மட்டும் 204.6 கிலோ!
இந்த உணவை அவ்வளவு எளிதாக அவர்களால் தயார் செய்துவிட முடியவில்லை. இதற்கு அவர்களுக்கு 14 மணி நேரம் 36 நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
மாவு பிசைதல், வறுத்தல் மற்றும் முட்டைகளை உடைத்து ஆம்லெட்டாக்குதல் என அத்தனை பணிகளையும் சேர்த்து இத்தனை மணி நேரம் ஆனது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனைக்கு தயாராவதற்கு இவர்களுக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. கின்னஸ் சாதனையின்போது குளறுபடி நடந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கு முன்பே பல முறை முயற்சி செய்திருக்கின்றனர்.
இதுபோன்று இவர்கள் செய்த முயற்சியின்போது பல முறை ரொட்டியை சுருட்ட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கின்றனர். எனினும், கின்னஸ் சாதனையின்போது ஃபிலிம் உதவியுடன் அதை அழகாக சுருட்டி வெற்றி பெற்றிருக்கின்றனர்.
204.06 கிலோ எடையில் ரோலெக்ஸ் உணவை தயார் செய்வதற்கு 72 கிலோ மாவு, 90 கிலோ காய்கறிகள், 1,200 முட்டைகள் தேவைப்பட்டிருக்கின்றன என்று கின்னஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/SDvO9lzsUIY
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா