More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை குன்னூர் வருகை!
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை குன்னூர் வருகை!
Aug 27
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை குன்னூர் வருகை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (சனிக்கிழமை) குன்னூர் வருகிறார். அவருடன் முப்படை தளபதி மற்றும் 14 ராணுவ உயர் அதிகாரிகளும் உடன் வருகின்றனர்.



இதற்காக நாளை காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் அவர் கோவை வருகிறார். பின்னர் இங்கிருந்து குன்னூர் ஜிம்கானா கிளப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.



பின்னர் காரில் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு செல்லும் அவர் நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.



நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார்.



அங்கு நடப்பு ஆண்டில் பயிற்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் உரையாற்றுகிறார். வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு அவரவர் மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக மொழி பெயர்ப்பாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

 



அதனை தொடர்ந்து முப்படை தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். குன்னூரில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் இங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு வந்து, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.



மத்திய மந்திரி வருகையையொட்டி குன்னூர் வெலிங்டன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ மையம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் ஜிம்கானா கிளப்பில் இருந்து அவர் காரில் பயணிக்க கூடிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கோவையில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் வரும் போது கால நிலை மாற்றம் ஏற்பட்டால், அவர் ஹெலிகாப்டரில் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் குன்னூர் வருவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள

Oct31

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

Mar12

தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ

Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Aug25

கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய

Jan03

பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய ம

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்

Jan26

போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப

Feb17

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி

Sep29

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக

Aug21

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண

Sep06

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வ

Nov05

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோ

Dec31


சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (13:36 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (13:36 pm )
Testing centres