ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்னா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி இயக்குனராக ஷங்கர், தற்போது நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாகிறது
ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு கதாநாயகியாகவும், இன்னொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று ஜெகபதி பாபு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தமன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரம்மாண்டமாக தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தை வரும் 2022 சம்மருக்குள் முடித்து வெளியிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே நடிகை அஞ்சலி இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் இந்த படத்தில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.


நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருட
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தர
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
