ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்தித்து பேசவுள்ளனர்
கோடநாடு விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அத்துடன் இந்த விவகாரம் குறித்து கலைவாணர் அரங்கில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கு முடியும் தருவாயில் உள்ளது.ஆனால் திட்டமிட்டு திமுக அரசு பொய் வழக்கு போட திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கோடநாடு கொலை விவகாரத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக இன்று புறக்கணிக்கிறது . அத்துடன் ஆளுநரை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முறையிட திட்டம் வகுத்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்து கோடநாடு விவகாரம் குறித்து மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மே
