கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் சில தனியார் பள்ளிக்கூடங்கள் இணையவழியில் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கின்றன. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
எனினும் போதிய வசதி இல்லாத குழந்தைகள், தொலைக்காட்சி மூலம் கல்வி பயில இயலாத நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நேரடியாக பயின்றால்தான் பாடங்களை நன்கு கற்பதற்கு முடிகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் தங்களது பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாடங்களை பயிற்றுவிக்கின்றனர்.
அதன்படி நேற்று மூலைக்கரைப்பட்டி மறவன்குளத்துக்கு சென்ற ஆசிரியர்கள், அங்குள்ள மரத்தடியில் மாணவர்களை முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமரச்செய்து பாடங்களை பயிற்றுவித்தனர். கல்வி தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பு செய்வதை மாணவர்கள் தவறாது பார்த்து பயில வேண்டும் என்றும் விளக்கி கூறினர். மாணவர்கள் கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்களை தலைமை ஆசிரியை அகஸ்டினா பாராட்டினார்.
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந் சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க
