நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆதிவாசி கிராமம். இங்கு வசிக்கும் 19 வயது இளம்பெண் கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கர்ப்பிணியாகி 7 மாதம் மட்டுமே ஆகியிருந்த நிலையில், அவருக்கு குறை பிரசவமாக குழந்தை பிறந்தது. ஆனால் தொப்புள் கொடி முழுமையாக வெளியே வரவில்லை. இதனால் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சந்திரிகா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது.
ஆனால் தாளமொக்கை ஆதிவாசி கிராமத்துக்கு செல்ல சரிவர சாலை வசதி இல்லை. இதனால் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை ஏற்பட்டது. உடனே குழந்தையுடன் அவரை உறவினர்கள் தொட்டில் கட்டி சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தாளமொக்கை இலைசெட் பகுதிக்கு சுமந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தாளமொக்கை கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
முன்னாள் முதல்-மந்திரி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர ம கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்
