இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் -நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டில் ஆஸி.,க்குஎதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹர்பஜன்சிங். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்,20-20 போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 417 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட் எடுத்து சாதனை படைத்த ஹர்பஜன்சிங் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை திருமணம்செய்து கொண்ட பின்னர் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்து நடிகர் ஆனார். டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹர்பஜன்சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு முதல் குழந்தை பெண் குழந்தை இருக்கும் நிலையில் நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹர்பஜன்சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம
டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45