கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். அப்போது, தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். முதலமைச்சரைப்போல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் பல இடங்களுக்குச் சென்று அப்போது ஆய்வு மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பு திடீர் சந்திப்பாக கூறப்பட்டாலும், ஏற்கனவே முன் அனுமதி பெற்ற பிறகே இந்த சந்திப்பு நடைபெறுவதாக தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை முதல் முறையாக சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த மு இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர
