சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் தள்ளாடியபடி சாலையில் நடந்து வந்தார். திடீரென்று அவர் சாலையில் சென்றவர்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டார். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பெண் கஞ்சா போதையில் இருப்பது தெரிய வந்தது. அவர் போலீசாரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
மெரினா கடற்கரை சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு படுப்பதும், உருண்டு புரள்வதும், மாநகர பஸ்சை வழிமறிப்பதும் என கஞ்சா போதையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அந்த பெண்ணின் அலப்பறை தொடர்ந்தது.
அந்த பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் பரிதவிப்புக்கு ஆளாகினர். இந்தநிலையில் அந்த வழியாக 108 ஆம்புலன்சில் சென்ற ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணின் போதையை தெளிய வைப்பதற்கான திரவத்தை அளித்தனர். பின்னர் அவரை குண்டு கட்டாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் மெரினா கடற்கரை நடைபாதையில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிய வந்தது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும்
சுகாதாரத்துறை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
