மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிருகக்காட்சி சாலையில் நடந்தது.
இதில் கர்நாடக பாஜக துணை தலைவரும், முதல்-மந்திரி எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திரா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவார் என்பது முடிந்து போன கதை. அதனால் முதல்-மந்திரி மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். மீதம் உள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பா தான் முதல்-மந்திரியாக இருப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
கர்நாடக பாஜகவினர் டெல்லிக்கு சென்றால் தலைமை மாற்றம் குறித்து தான் பேச போகிறார்கள் என்று அர்த்தமா?. டெல்லிக்கு செல்பவர்கள் அவர்களது சொந்த வேலையாக கூட செல்லலாம். டெல்லிக்கு செல்ல கூடாது என்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. இதனால் கா்நாடக பா.ஜனதாவினரின் டெல்லி பயணத்திற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம்.
தேர்வு எழுதி உள்ளேன். முடிவுக்காக காத்து இருக்கிறேன் என்று மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறி உள்ளார். அவரது கருத்தை பற்றி விவாதம் நடத்த வேண்டியது இல்லை.
கர்நாடக பாஜக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கர்நாடகம் வந்து எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்று உள்ளார். தேசிய தலைவர்களும் எடியூரப்பா ஆட்சியை பாராட்டி உள்ளனர்.
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
தமிழகத்தில்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந
