பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.
மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதிலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ‘சிவகுமார் பொண்டாட்டி’ எனும் பாடல் நாளை (ஜூலை 2) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ
நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
