சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
தமிழ் சினிமாவில் முன்னண
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
