2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை நவ்நீத் ராணா. இவர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார்.
இவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழை பெற்றதாக மும்பை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவ்நீத் ராணா எம்.பி.யின் சாதி சான்றிதழை அதிரடியாக ரத்து செய்தனர். மேலும் போலியாக சாதி சான்றிதழ் பெற்ற பெண் எம்.பி.க்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நவ்நீத் ராணா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள், பெண் எம்.பி.யின் சாதி சான்றிதழை ரத்து செய்து மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும் மனு தொடர்பாக மராட்டிய அரசு மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக நவ்நீத் ராணா எம்.பி.க்கு இடைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய * மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா் மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர்
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அ திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட
