தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல் படத்தில் நடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திகாவின் தங்கை துளசியும் 2013-ல் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துளசி நடிப்பில் கடைசியாக யான் படம் 2014-ல் வெளிவந்தது. அதன்பிறகு அவருக்கும் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ
தமிழ் சினிமா
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
