விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். முதலில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்கான செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள
லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
