More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மில்கா சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்!
மில்கா சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்!
Jun 19
மில்கா சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்!

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விளையாட்டு ஐகான் மில்கா சிங் மறைந்தார் என்ற செய்தி  வருத்தம் அடைய செய்தது. அவரது போராட்டங்களின் கதை மற்றும் விளையாட்டில் அவரது பாத்திரத்தின் வலிமை தொடர்ந்து தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும்.



அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.



இதேபோல், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உங்கள் கடைசி விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இந்தியா தனது நட்சத்திரத்தை இழந்துவிட்டது. மில்கா சிங் ஜி எங்களை விட்டுப் பிரிந்தாலும்,ஒவ்வொரு இந்தியரும் பிரகாசிக்க அவர் தொடர்ந்து ஊக்கமளிப்பார் என குறிப்பிட்டுள்ளார். 



பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மில்கா சிங் ஜியின் மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பறக்கும் சீக்கியரின் புராணக்கதை அடுத்த தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு 

கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க

Jul14

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

Mar28

தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு

Jan17

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத

May06

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

Jul30

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு

May01

கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய

Jan26

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்

Jul03

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி

Feb20

மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி

May27

வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத

Mar23

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:20 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:20 pm )
Testing centres