மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் சென்றார். அப்போது, மேட்டூரை சேர்ந்த பெண் என்ஜினீயர் இரா.சவுமியா என்பவர் அளித்த கடிதத்தை படித்து பார்த்த முதல்-அமைச்சர் நெஞ்சம் நெகிழ்ந்தார்.
அந்த கடிதத்தில், ‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை நிதியாக கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் தனது குடும்பசூழ்நிலையை விளக்கியதுடன், எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, தனது சமூக வலைதளப்பக்கங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:-
“மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சவுமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம்
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள
