இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை உயர்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2123 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,82,282 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் -பிரதமர் மோடி அறிவிப்பு
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 13,03,702 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23,61,98,726 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுத அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந
